கோவையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ சேர்க்கைக்கான டான்செட் நுழைவுத் தேர்வு - 4273 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. எம்.பி.ஏ., படிப்புக்கு 3292 பேரும், எம்.சி.ஏ., படிப்புக்கு 981 பேரும் எழுதினர்.


கோவை: கடந்த ஆண்டு வரை M.E., M.Tech., M.Arch., M.Plan போன்ற படிப்புகளுக்கு TANCET தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் SITEEE நுழைவுத் தேர்வு எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படுகிறது.

இந்த இரண்டு நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற டான்செட் தேர்வை கோவை மாவட்டத்தில் எம்.பி.ஏ., படிப்புக்கு 3292 பேரும், எம்.சி.ஏ., படிப்புக்கு 981 பேரும் எழுதினர்.



இந்நிலையில், எம்சிஏ சேர்க்கைக்கான தேர்வுகள் மதியமும், எம்பிஏ சேர்க்கைக்கான தேர்வு பிற்பகலிலும் நடத்தப்பட்டது.



கோவையில் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி, பிஎஸ்ஜி டெக், அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம், சிஇடி உள்ளிட்ட 5 மையங்களில் டான்செட் தேர்வு நடைபெற்றது.

இதில், ஜிசிடி, அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் ஆகிய இரு மையங்களில் எம்சிஏ தேர்வு காலையில் நடைபெற்றது.



மொத்தம் 923 பேர் தேர்வெழுத, 58 பேர் தேர்வுக்கு வரவில்லை. பிற்பகல் நடைபெற்ற எம்பிஏ சேர்க்கைக்கான தேர்வை 5 மையங்களில் 3292 பேர் எழுதினர்.

மேலும், SITEEE நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்டம் முழுவதும் ஒதுக்கப்பட்ட மையங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...