கோவை வேளாண் பல்கலை.க்கு விருது - எரிசக்தி மற்றும் வளநிறுவனம் வழங்கிப் பாராட்டு

உலகத் தண்ணீர் தினத்தையொட்டி எரிசக்தி மற்றும் வள நிறுவனம் சார்பில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு TERI-IWA-UNDP விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் வேளாண் பல்கலைக்கு விருது வழங்கப்பட்டது.


கோவை: 2023 ஆம்‌ ஆண்டு உலக தண்ணீர்‌ தினத்தை முன்னிட்டு புதுதில்லியில்‌ உள்ள எரிசக்தி மற்றும்‌ வள நிறுவனம்‌ (TERI)-ல்‌ விருது வழங்கும்‌ விழா நடைபெற்றது.

புதுதில்லியின்‌ எரிசக்தி மற்றும்வள நிறுவனம்‌ (TERI) ஒரு சுயாதீனமான பல பரிமாண அமைப்பு இந்த நீர்‌ நிலைத்தன்மை விருதுகளை தொடங்கியுள்ளது.

இது நீர்‌ நிலைக்கான நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதை ஊக்குவிக்கும்‌ நோக்கத்தில் உள்ளது. TERI-IWA-UNDP நீர்‌ நிலைத்தன்மை விருதுகள்‌ அனைத்து வகையான புதிய யோசனைகள்‌, அணுகுமுறைகள்‌, செயல்முறைகள்‌, தயாரிப்புகள்‌, சேவைகள்‌, தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ நீர்த்துறையில்‌ உள்‌ள பிறவகையான கண்டுபிடிப்புகள்‌ ஆகியவற்றில்‌ சிறந்து விளங்குவதை மதிப்பிடுகிறது.

2022-23 ஆம்‌ ஆண்டிற்கானTERI-IWA-UNDP நீர் நிலைத்தன்மை விருதை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, வேளாண்துறையில்‌ சிறந்த நீர்‌ பயன்பாட்டுத்‌ திறனின்‌ கீழ் பெற்றுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி சார்பில்‌, பல்கலைக்கழக வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரியின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ அ.ரவிராஜ்‌ மற்றும்‌ முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ந.செந்தில்‌ ஆகியோர்,‌ நவ்ஜோதி அறக்கட்டளை நிறுவனர்‌ முனைவர்‌ கிரண்பேடி, நல்லாட்சிக்கான தேசிய மையத்தின்‌ இயக்குநர்‌ ஜெனரல்‌ மற்றும்‌ முன்னாள்‌ பணி இயக்குநரான பாரத்லால்‌ மற்றும்‌ ஜல்சக்தி அமைச்சகத்தின்‌ சிறப்புச்‌ செயலர் தேபாஸ்ரீமுகர்ஜி மற்றும்‌ முனைவர்‌ சியாமல்‌ குமார்‌ சர்க்கார்‌, புகழ்‌ பெற்ற சக மற்றும்‌ மூத்த இயக்குநரிடம்‌ இருந்து இவ்விருதை பெற்றுக்‌கொண்டனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...