உலக தண்ணீர் தினம் - கோவை பார்க் கல்லூரியில் கொண்டாட்டம்

மார்ச்.22-ம் தேதி உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில் நுட்ப கல்லூரியில் கொண்டாடப்பட்டது. விழாவில் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டன.


கோவை: கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்ப கல்லூரியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி Dr.அனுஷா ரவி மற்றும் கல்லூரியின் முதல்வர் அங்காள பரமேஸ்வரி மற்றும் பேச்சாளராக பேராசிரியர் கணேஷகுரு ஆகியோர் தலைமை தாங்கினர்.

மார்ச் 21 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை செய்த மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி Dr.அனுஷா ரவி கொடுத்து சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி வளாகத்தில் தென்னை மரக்கன்றுகள் நட்டு விழாவினை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...