கோவை வேளாண் பல்கலையில்‌ உலக தண்ணீர்‌ தின விழா - நீரை பாதுகாக்க மாணவர்களுக்கு அறிவுரை!

உலக தண்ணீர் தினத்தையொட்டி கோவை வேளாண் பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர்‌ ரவீந்திரன்‌, காலநிலை மாற்றம்‌, மாசுபாடு மற்றும்‌ பற்றாக்குறையின்‌ காரணமாக நீரின்‌ தேவை அதிகரித்து வருவதால், அனைவரும் நீரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலை மாணவர்களுக்கு தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர் நுட்ப மையம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர்‌ முனைவர்‌ ரவீந்திரன்‌ தலைமை தாங்கி உரையாற்றினார்‌.



அவர் தனது உரையில் பேசியதாவது, உலக அளவில்‌ 22 மில்லியன்‌ மக்கள்‌ பாதுகாப்பான குடிநீரை பேணுவதில்‌ சிரமம்‌ மேற்கொள்கின்றனர்‌. மேலும்‌ 2.6 மில்லியன்‌ மக்கள்‌ தண்ணீரை சேகரிக்க குறைந்தபட்சம்‌ 30 நிமிடங்களுக்கு மேல்‌ செலவிடுகின்றனர்‌.

சர்வதேச விதிமுறைகளின்‌ படி ஆண்டுக்கு 1700 கனமீட்டருக்கும்‌ குறைவாக உள்ள தனிநபர்‌ நீர் கிடைக்கும்‌ நாடுகள்‌ தண்ணீர்‌ பற்றாக்குறை நாடாக வகைப்படுத்தப்பட்டு uள்ளன. அதில்‌ இந்தியாவின்‌ தனிநபர்‌ நீர் கிடைக்கும்‌ அளவு 1545 கனமீட்டர் ஆகும். இது இந்தியாவை ஒரு நீர்‌ வறட்சி நாடாகவே எடுத்து காட்டுகிறது.

இந்தியா ஒரு விவசாய நாடாக இருப்பதால்‌ நீர்ப்பாசனம்‌ என்பது மிகப்பெரிய அளவில்‌ பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின்‌ மொத்த நீர் தேவைகளில்‌ 78 சதவீதம்‌ நீர் பாசனத்திற்காகவும்‌, 6 சதவீதம்‌ உள்நாட்டு உபயோகத்திற்காகவும்,‌ 5 சதவீதம்‌ தொழில்‌ துறைக்காகவும்‌ பயன்படுத்தப்படுகிறது.

இத்தருணத்தில்‌ காலநிலை மாற்றம்‌, மாசுபாடு மற்றும்‌ பற்றாக்குறையின்‌ காரணமாக நீரின்‌ தேவை அதிகரித்து வருவதை நாம்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌. இதுவே தண்ணீரை பாதுகாக்கவும்‌, மதிப்பிடவும்‌ உரிய நேரம்‌.

ஒரு ஜீன்ஸ்‌ காலனியை உற்பத்தி செய்ய 10,000 லிட்டர்‌ தண்ணீர்‌ செலவு செய்யப்படுகிறது. இது ஒரு நபர்‌ பத்து ஆண்டுகளுக்கு குடிப்பதற்கு தேவைப்படும்‌ நீரின்‌ அளவாகும்‌. ஆகவே ஒவ்வொரு குடிமகனும்‌ நீரை பயன்படுத்துவதும்‌ அதை மாசு படுத்தாமல்‌ உட்கொள்வதும்‌ இன்றியமையாததாகும்‌.

தண்ணீர் என்பது ஒவ்வொரு நபருக்கும்‌ வெவ்வேறு செய்திகளை அறிவிக்கிறது. எனவே உலக தண்ணீர் தினத்தன்று தண்ணீர்‌ குறித்த அனைத்து நற்செய்திகளையும்‌ தெரிந்து தண்ணீரைக்‌ கொண்டாடுவோம்‌. இன்று ஒரு சொட்டு நீரை சேமிப்பது நாளை ஒருவரின்‌ தாகத்தை தணிக்கும்‌ என்பதை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில்‌ உலக தண்ணீர்‌ தினத்தின்‌ அறிமுக கருத்துகளுடன்‌ பங்கேற்ற அனைவரையும்‌ நீந் நுட்ப மைய இயக்குநர் முனைவா்‌ செ.பழனிவேலன்‌ வரவேற்றார். இறுதியாக பேராசிரியர் முனைவா்‌. சி.சுவாமிநாதன்‌ நன்றியுரை ஆற்றினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...