கோவை கற்பகம் கல்லூரியில் இந்திய பங்குச்சந்தை குறித்த தேசிய கருத்தரங்கு

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் ‘இந்தியப் பங்குச்சந்தையின் முன்னேற்றமும் வாய்ப்புகளும்’ என்ற தேசிய அளவிலான கருத்தரங்கில், 150க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர்.


கோவை: கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டனர்.

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில், ‘இந்தியப் பங்குச்சந்தையின் முன்னேற்றமும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் தொடக்க விழாவில் துறைத்தலைவர் முனைவர் ஜோதி வரவேற்புரை வழங்கினார்.



துணைவேந்தர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். கோயம்புத்தூர் ஃபின்வெஸ்ட் நிறுவனத்தின் ஃபினான்ஷியல் கன்சல்டன்ட் எஸ்.கிருஷ்ணகுமார் கருத்தரங்க ஆய்வுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், மூலதன சந்தையின் போக்குகள் குறித்தும், முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை குறித்து விளக்கினார். ஒவ்வொரு முதலீட்டாளரும் சிறந்த மூலதன உத்திகள், ஒழுக்கம் மற்றும் பொறுமை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் கருத்தரங்கில் பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், பரஸ்பர நிதி முதலீடு, பங்குச்சந்தை முரண்பாடுகள், கோவிட்-19-க்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தையின் செயல் திறன், முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் வழங்கினர். இந்த விழாவில் வணிக மேலாண்மையியல் துறைப் பேராசிரியர் முனைவர் எஸ். வெங்கடாசலம் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...