உலக காடுகள் தினம்: கோவை குற்றாலத்தில் பார்க் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணி!

உலக காடுகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் கல்லூரி மாணவர்கள், கோவை குற்றாலத்தில் உள்ள குப்பைகளை சேகரித்து தூய்மைபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.


கோவை: உலக காடுகள் தினத்தையொட்டி கோவை குற்றாலத்தில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21ஆம் தேதியான இன்று, உலக காடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது.



அதேபோல், மார்ச் 22 ஆம் தேதியான நாளை உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்ப கல்லூரியின் சுற்றுச்சூழல் துறை மாணவர்கள் தங்களுடைய பேராசிரியர்களுடன் சேர்ந்து, கோவை குற்றாலத்திற்கு சென்று அங்குள்ள குப்பைகளை சேகரித்து தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இதற்காக கோவை குற்றாலத்திற்கு வருகை தந்த கல்லூரி மாணவர்களை, வனத்துறை அலுவலர் சுசீந்திரநாத், பாரஸ்டர் ரஞ்சித், eco forester தேவராஜ், பாரஸ்ட் கார்டு நடராஜ் மற்றும் கருப்புசாமி வரவேற்று, வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், காடுகள் தினமான இன்று காடுகளை பற்றி மாணவர்களுக்கு விளக்கினர். தொடர்ந்து அவர்களுக்கு அந்த இடங்களை தூய்மை செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.



மாணவர்களின் இந்த முயற்சி மற்றும் செயல்களை பாராட்டிய கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகளை முன் நின்று வழி நடத்திக் கொண்டிருக்கும் கல்லூரியின் முதல்வர் அங்காள பரமேஸ்வரிக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...