இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு பயிற்சி - கோவை வேளாண் பல்கலை அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறும் வகையிலான TNPSC, SSC, IBPS மற்றும் RRB போட்டித்தேர்வுகளுக்கு 200 பேருக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்குவதற்கான அறிவிப்பை கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.



கோவை: TNPSC, SSC, IBPS மற்றும் RRB ஆகிய போட்டித்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ளும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின்‌ சார்பில்‌ இயங்கும்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பயிற்சி மையங்களால்‌ கட்டணமில்லா ப்‌ பயிற்சி வகுப்புகள்‌, கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைகழகத்தில்‌ 200 நபர்களுக்கு பயிற்சிகள்‌ வழங்கப்படுகிறது.

தற்போது, மேற்படி போட்டித்‌ தேர்வுகளில்‌ கலந்து கொள்ளும்‌ தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு , புதிதாக இணையவழி மூலம்‌ விண்ணப்பங்கள்‌ பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது . மாலை 5.30 மணிமுதல்‌ 8.30 மணிவரை ஆறுமாத காலம்‌ இந்தப் பயிற்சி வகுப்புகள்‌ நடைபெற உள்ளது.

இப்போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில்‌ உணவு மற்றும்‌ தங்கும்‌ வசதிகள்‌ இல்லை.

1. தகுதி à®…. குறைந்தபட்சம்‌ 10 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. ஆ. 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌. இ. தமிழ்நாட்டைச்‌ சேர்ந்தவராக இருக்க வேண்டும்‌.

2. விண்ணப்பிக்கும்‌ முறை பயிற்சி பெற விரும்புவோர்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக இணையதளமான https://tnau.ac.in/cecc/ மூலம்‌ இணையவழியாக 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம்‌. மேலும்‌, பதிவேற்றம்‌ செய்யப்பட்ட விவரங்களை முழுமையாக சரிபார்த்த பின்னர்‌ விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌. இணைய வழி மூலம்‌ விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கப்பட்ட பின்‌ திருத்தம்‌ கோரி பெறப்படும்‌ எந்த ஒரு கோரிக்கையும்‌ எற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

3. அழைப்புக்‌ கடிதம்‌ பயிற்சி வகுப்புக்கான அழைப்புக்‌ கடிதம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக https://tnau.ac.in/cecc/ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌. இதனை சேர்க்கையின்‌ போது அவசியம்‌ எடுத்துவர வேண்டும்‌. விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை சூறித்த நாள்‌ மற்றும்‌ நேரம்‌ இணையதளத்தில்‌ மட்டுமே வெளியிடப்படும்‌. அழைப்புக்‌ கடிதம்‌ அஞ்சல்‌ மூலம்‌ அனுப்பி வைக்கப்பட மாட்டாது.

4. தேர்வு செய்யும் முறை பத்தாம்‌ வகுப்பு மொத்த மதிப்பெண்‌ அடிப்படையில்‌ தேர்வு செய்ப்பட்ட தேர்வுகள்‌ பயிற்சி மையத்தில்‌ இனவாரியாக உள்ள இடங்களுக்கு எற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர்‌.

5. உணவு மற்றும்‌ தங்கும்‌ வசதிகள்‌ இப்பயிற்சி மையங்களில்‌ இல்லை.

6. வகுப்பு நேரம்‌ தேர்வர்கள்‌ பயிற்சிக்கு தினமும்‌ வந்து செல்லும்‌ வகையில்‌ மாலை 5.30 மணி முதல்‌ 8.30 மணி வரை திங்கள்‌ முதல்‌ சனிக்கிழமை வரை நடைபெறும்‌. பயணப்படிகள்‌ வழங்கப்பட மாட்டாது. வருகைப்பதிவு மிகவும்‌ அவசியம்‌.

7. பயிற்சி வகுப்பிற்கான சேர்கைக்கு இட ஒதுக்கீட்டு விவரங்கள்‌ பொது - 31% பிற்படுத்தப்பட்டோர் - 26.5%, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (DNC) 20%, ஆதி திராவிடர்-15%, சீர்மரபினர் - 3%, பழங்குடியினர்-1%, மொத்தம் - 100%. சிறப்பு இட ஒதுக்கீட்டின்‌கீழ்‌ கோரும்‌ உரிமைகளுக்கான தகுதிகள்‌ இவ்வறிக்கை நாளன்று இருக்க வேண்டும்‌ மற்றும்‌ தகுதி வாய்ந்த அலுவலரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ வருமான சான்றிதழ்‌ சேர்க்கையின்‌ போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு 0422 - 6611242 / 6611442 என்ற தொலைபேசியிலும்‌ https://tnau.ac.in/cecc/ என்ற மின்னஞ்சல்‌ முகவரியிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...