தாராபுரத்தில் தனியார் கல்லூரியின் 23வது ஆண்டு விழா - கலை நிகழ்ச்சிளுடன் உற்சாகமாக கொண்டாடிய மாணவிகள்!

தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 23 வது ஆண்டு விழாவில் கடந்தாண்டு பல்கலைத்தேர்வில் முதல் மதிப்பெண் மற்றும் தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவை, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

தாராபுரத்தில் செயல்பட்டு வரும் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 23வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை, கல்லூரி தலைவர் கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் தமிழ்ச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார்.



கல்லூரிச் செயலாளர் சுலைமான் தலைமையுரையாற்றினார். கல்லூரி துணைத்தலைவர் தமிழரசன் வாழ்த்துரை வழங்கினார்.



சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன் கலந்து கொண்டார்.



இந்த நிகழ்வில் கவிஞர் கவிதாசன் பேசியதாவது, மாணவிகள் தங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய உறுதுணை புரிந்த பெற்றோர்கள். ஆசிரியர்களுக்கு நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும். நான் சரித்திரம் படைப்பவனாக மாறவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையில் உயரத்தை அடைய ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும்.



தன்னம்பிக்கை, திறமை. குறிக்கோள் இருந்தால் நீங்களும் சாதனையாளர் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் சென்ற ஆண்டு பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப் பதக்கமும் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி நிர்வாகிகள் சுப்ரமணியன், அப்துல் ரஹ்மான் முகமது அப்துல்காதர், சிராஜிதீன், கார்த்தி அரசு ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பேராசிரியர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...