11ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு - கோவை மாவட்டத்தில் 952 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுதேர்வில் ஆங்கில தேர்வில் 34,744 மாணவர்கள் தேர்வு எழுதத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 33,792 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். அதன்படி, கோவை மாவட்டத்தில் 952 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.


கோவை: கோவை மாவட்டத்தில் 952 மாணவர்கள் ஆங்கில தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இன்று (16ம் தேதி) ஆங்கில தேர்வு நடந்தது. இதில் 34,744 மாணவர்கள் தேர்வு எழுதத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 33,792 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 952 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே தேர்வு குறித்து மாணவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. பெரும்பாலான மாணவர்கள் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாகவும், மீதமுள்ளவை எளிதாக எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...