ரத்தினம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில் குருஷேத்ரா 3.0 நிகழ்ச்சி!

ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த குருஷேத்ரா 3.0 நிகழ்ச்சியில் பாட்டு, நடனம், வினாடி வினா, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கல்லூரி பேராசிரியர்களிடையே நடத்தி, வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: ரத்தினம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில், குருஷேத்ரா 3.0 எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டு, கலைநிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு முதன்மை நிர்வாக அலுவலர் மாணிக்கம் தலைமை தாங்கினார். டாக்டர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சியை டீன் சுரேஷ், காட்சி தொடர்பியல் துறை தலைவர் சதீஷானந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

சோலோ சிங்கிங்‌, சோலோ டான்ஸ்‌, குரூப்‌ டான்ஸ்‌, ரங்கோலி, மெஹந்தி, வினாடி வினா, மிஸ்டர்‌ & மிஸ்‌. குருஷேத்ரா, மொபைல்‌ போட்டோகிராபி, டிராயிங்‌, இட்ஸ்‌ மை டேலண்ட்‌, ஸ்டாண்ட்‌-அப்‌ காமெடி, என பல்வேறு மேடை மற்றும்‌ மேடைக்கு வெளியே போட்டிகள்‌ நடத்தப்பட்டன.



நெருப்பு இல்லாமல்‌ சமையல்‌, ஊமைத்தனமான சண்டைகள்‌ மற்றும்‌ ஆம்‌, இல்லை, இருக்கலாம்‌ என பலப்‌ போட்டிகள்‌ நடத்தப்பட்டன. அதில்‌ பல்வேறு கல்லாரிகளைச்‌ சேர்ந்த 200க்கும்‌ மேற்பட்ட பேராசிரியர்கள்‌ கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி பெற்று பரிசுகளை தட்டிச்‌ சென்றனர்‌.



ரோலிங்‌ கோப்பையை ராஜபாளையத்தில்‌ உள்ள ராஜபாளையம்‌ ராஜூ கல்லூரியும்‌, இரண்டாம்‌ இடத்தை சென்னை குருநானக்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லாரி வென்றன.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...