கோவை மண்டல அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில், தேசிய அறிவியல் தின திறனறி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் பை (Pi day) தினம் நடைபெற்றது.


கோவை: கோவை மண்டல அறிவியல் மையத்தில், தேசிய அறிவியல் தின திறனறி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டு விழா மற்றும் பை (Pi day) தினம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட அறிவியல் அலுவலர் லெனின் தமிழ்கோவன் தலைமை வகித்தார். PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மீனா சிறப்புரை ஆற்றினார்.

எஸ்.என்.எம்.வி. சயின்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் லெனின்பாரதி, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் பாலவிஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டி, அறிவியல் கண்காட்சி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...