11ஆம் வகுப்பு பொதுதேர்வு தொடக்கம் - கோவை மாவட்டத்தில் 34,390 மாணவ மாணவிகள் பங்கேற்பு!

தமிழ்நாடு முழுவதும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித் தேர்வு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 34,390 மாணவ மாணவிகள் 11-ம் வகுப்பு தேர்வினை எழுதினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.



தமிழ்நாடு முழுவதும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 14) முதல்தொடங்கி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித் தேர்வு நடைபெற்றது.

இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள 362 பள்ளிகளைச் சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,760 மாணவிகள் என 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

தேர்வு கண்காணிப்பிற்காக 175 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வை கண்காணிக்க 128 முதன்மை கண்காணிப்பாளர்கள், 138 துறை அலுவலர்கள், 1,800 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...