கோவை கற்பகம் பல்கலையில் மகளிர் தினவிழா - கோலாகலமாக கொண்டாடிய மாணவிகள்

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு மகளிர் தினவிழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மகளிர் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மகளிர் நல மேம்பாட்டுப்பிரிவின் சார்பில் கடந்த மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வெங்கடாசலபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கோயம்புத்தூர் சிபிஎன் அறக்கட்டளையின் தன்னார்வலர் குமுதசந்திரிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது,

காலந்தோறும் பெண்களின் வாழ்க்கையானது, ஆதிக்க நிலையிலான பல கட்டுப்பாடுகளுடன் கட்டமைக்க பெறுகிறது. ஒவ்வொரு பெண்ணும் மரபு சார்ந்த கட்டுப்பாடுகளை உடைத்தெறிகிற தன்னம்பிக்கையுடன் பிறந்திருப்பதை அவர்கள் நிறைவாக உணர வேண்டும்.

தங்களது அடையாளத்தை கட்டமைக்கிற முழு சுதந்திரமும், தமது உரிமை என்பதை வலுவாக நம்ப வேண்டும். அத்தகைய அடையாளத்தை சமுதாயத்தில் வெளிப்படுத்துகிற நோக்கில், உடலாலும், அறிவாலும், மனதாலும் திறமை பெறவேண்டும்.

தேடல் நிறைந்த கல்வியும், ஆர்வம் சிறந்த உழைப்பும், காலத்திற்கேற்ற திறன் வளர்ச்சியும் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகும். சமுதாயத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த நிலைகளில் தன்னிறைவு பெற்று விளங்குவது நிறைவான வளர்ச்சியாகாது.

அனைத்து பெண்களும், தங்களது உரிமைகளை நிறைவாக பெற்று சிறப்பதற்கான ஆக்கங்களை முன்னெடுக்கின்ற முற்போக்கு சிந்தனையில் ஒவ்வொரு பெண்ணும் சிறக்க வேண்டும். பெண்கள் தமது தேவைகளை தாமே நிறைவு செய்துகொள்ள உதவுகின்ற வகையில், சக பெண்களுக்கு இடையேயான பகிர்வு மனப்பான்மை நாளும் வளர வேண்டும். அவ்வாறு, பெண்களிடம் வலுப்பெறுகின்ற, தன்னம்பிக்கை வளர்ச்சியே, உண்மையான மகளிர் வளர்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார். சிறப்புரைக்குப் பின்னதாக, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் திறன் வெளிப்பாட்டுக்கான பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனைவர் சா.ஷர்மிளா மற்றும் முனைவர் சு.மஞ்சுபிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...