கோவையில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் - ஏஐசி ரைஸ் மற்றும் ஆர்‌.ஃப்.பி.ஐ.ஓ ஏற்பாடு

கோவையில் ஏஐசி ரைஸ் மற்றும் ஆர்‌.ஃப்.பி.ஐ.ஓ., சார்பில் ஏஐசி ரைஸில் நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஸ்டார்ட்அப்-களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூட்டாண்மைகளை உருவாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: ஏஐசி ரைஸ் மற்றும் ஆர்‌.ஃப்.பி.ஐ.ஓ இணைந்து ஏஐசி ரைஸில் நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உடனான கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

இதில் ஆர்‌.ஃப்.பி.ஐ.ஓ -ன் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் சங்கர், தலைமை வருவாய் துறை அதிகாரி ஜெஃப்ரி சான்டிலிஸ் மற்றும் தலைமை வணிகத் துறை அதிகாரி மைக்கேல் லாண்ட்கிரேன் ஆகியோர் பங்கு பெற்றனர்.



இந்நிகழ்வின் மூலம் தொழில் துறைகள் பற்றிய பரிந்துரைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து, வட அமெரிக்காவில் தொழில் வளர்ச்சிக்கு உதவ வழிவகை செய்யப்பட்டது. ஸ்டார்ட்அப்-களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூட்டாண்மைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



மேலும், தொழில் முனைவோர்களுக்கு இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.



இந்நிகழ்வை, இரத்தினம் குழுமத்தின் தலைவர் டாக்டர். மதன் ஏ. செந்தில் மற்றும் ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...