கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையம் திறப்பு

மருத்துவ கல்வி பயில விரும்பும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக, கோவை கணபதி பகுதியில் ரீச் அகாடமி சார்பில் நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரீச் அகாடமி கோவையில் தனது பயிற்சி மையத்தை இன்று கோவையில் துவக்கியுள்ளது.

2007இல் நுழைவு தேர்விற்கான பயிற்சியளிக்க துவங்கப்பட்ட முதல் தமிழ்நாட்டு நிறுவனம். இந்நிறுவனம் நீட், ஐஐடி, பட்டய கணக்காளர்கள் போன்ற கடுமையான தேர்வுகளுகான பயிற்சியை அளித்து வருகின்றது.

தமிழகம் முழுவதும் 17 மையங்களைக் கொண்டு 30க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இனைந்து பயிற்சியளித்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை கணபதி பகுதியில் தனது புதிய பயிற்சி மையத்தை துவக்கியுள்ளது.



இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரீச் அகாடமியின் நிறுவனர் நஞ்சுண்டேஸ்வரன் குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

போட்டி தேர்வுகளுக்கென துவக்கப்பட்ட இந்த பயிற்சி மையம், தற்போது கோவையில் புதிய மைல் கல்லாகப் பயிற்சி மையத்தைத் துவக்கியுள்ளது.

குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளவும் அதில் வெற்றி பெறவும் பயிற்சி அளிக்கவுள்ளது. இதில் அரசு ஒதுக்கியுள்ள 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவ, மாணவிகளுக்குச் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படவுள்ளது.

சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் மற்றும் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுவதாகவும், தங்கும் வசதியுடன் கூடிய இந்த பயிற்சி மையத்தினை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, நஞ்சுண்டேஸ்வரன் தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...