கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ உயிர்‌ தகவலியலில்‌ ஹேக்கத்தான்‌ நிகழ்ச்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்‌ தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்ப மையம்‌ மற்றும்‌ இ-யுவா மையம்‌ சார்பில்‌ உயிர்‌ தகவலியலில்‌ ஹேக்கத்தான்‌ நிகழ்ச்சி, கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.



கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ உயிர்‌ தகவலியலில்‌ ஹேக்கத்தான்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்ப மையம்‌ மற்றும்‌ இ-யுவா மையம்‌ சார்பில்‌ உயிர்‌ தகவலியலில்‌ ஹேக்கத்தான்‌ இன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள பல்வேறு கல்லூரிகளைச்‌ சார்ந்த மாணவர்கள்‌ (58 அணிகள்‌) கலந்து கொண்டு தங்களுடைய புதிய யுக்தியுடன்‌ கூடிய கருத்துக்களை முன்வைத்தனர்‌. அதில்‌ 15 அணிகள்‌ இறுதிச்சுற்றுக்குத்‌ தேர்வு செய்யப்பட்டனர்‌.



இந்நிகழ்ச்சியின்‌ தொடக்க விழாவில்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர்‌ முனைவர்‌ செந்தில்‌ தனது துவக்க கருத்துரையாற்றினார்‌. விவசாயம்‌ மற்றும்‌ மருத்துவத்துறையில்‌ உள்ள இன்டர்நெட்‌ ஆப்‌ திங்ஸ்‌ (IoT)-ன்‌ முக்கியத்துவத்தைப்‌ பற்றி விளக்கினார்‌.

மேலும்‌ அவர்‌, தொழில்முனைவோர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ வேளாண்‌ பல்கலையில்‌ உள்ள சிறப்பு உயிரித்‌ தொழில்நுட்ப மையத்தில்‌ உறுப்பினர்களாக இணைந்து ஆய்வு மையத்தில்‌ உள்ள உள்கட்டமைப்பு வசதிகள்‌, ஆய்வகக்கூடங்கள்‌ தொழில்நுட்ப நிபுணர்களின்‌ ஆலோசனையைப்‌ பெறவும்‌ மற்றும்‌ புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதல்‌ போன்ற வாய்ப்புகளைப்‌ பெறவும்‌ வழிவகுத்துள்ளது. எனவே தொழில்முனைவோர்கள்‌ சிறப்பு உயிரித்‌ தொழில்நுட்ப மையத்தில்‌ உறுப்பினர்களாகப்‌ பதிவு செய்து வாய்ப்புகளைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌ கூறினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ தமிழ்வேந்தன் பேசுகையில், இளம்‌ தொழில்முனைவோர்கள்‌ விவசாய சமுதாயத்திற்கு பயன்படும்‌ வகையில்‌ உயிர்‌ தகவலியலில்‌ நுட்பத்தைக்‌ கொண்டு புதுமையான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்‌ என்று வலியுறுத்தினார்‌.

தூவர உயிர் தொழில்நுட்பவியல்‌ துறை பேராசிரியை மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ கோகிலாதேவி வரவேற்றார். இறுதியாக, தாவர உயிர்‌ தொழில்நுட்பவியல்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ இ-யுவாமையத்தின்‌ தலைமை ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌ அருள்‌ நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியின்‌ தொடர்ச்சியாக, கோயம்புத்தூர்‌ சாண்டோர்‌ ஸ்பெஷாலிட்டி டயாக்னாஸ்டிக்ஸ்‌ நிறுவனத்தின்‌ பயன்பாட்டு தகவல் துறை உயிர்‌ தகவலியல்‌ மேலாளர்‌ சாத்விகா, மருத்துவ மரபியலில்‌ உயிர்‌ தகவலியல்‌ என்ற தலைப்பில்‌ விரிவுரையாற்றினார்‌. மருத்துவ ஆராய்ச்சியில்‌ உயிர்‌ தகவலியல்‌ பயன்பாட்டின்‌ மூலம்‌ புற்றுநோய்‌ ஆராய்ச்சி மற்றும்‌ அரிதான நோய்களுக்கான காரண காரணிகளை அடையாளம்‌ காணுதல்‌ ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்‌.

பெங்களூர்‌ மாலிகுலர்‌ கனக்சென்ஸ்‌ நிறுவனத்தின்‌ இணை அணித்தலைவர்‌ சண்முகப்பிரியா மருத்துவத்தரவு, ப்ரீப்ரிண்ட்‌ மைனிங்‌, புரதங்கள்‌ மற்றும்‌ மருந்துகளின்‌ உயிர்வேதியியல்‌ தொடர்பு, உயிர்வேதியியல்‌ எதிர்வினை, பயோமார்க்கர்‌ மற்றும்‌ பகுப்பாய்வு பற்றி விளக்கினார்‌.

சென்னை ஸ்ரீகந்த சிருஸ்டி ஸ்கில்‌ .ஃ.பாஸ்டெனர்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனத்தின்‌ முனைவர்‌ சுரேந்திரன்‌ இன்டர்நெட்‌ ஆப்‌ திங்ஸ்‌ (IoT)-ன்‌ வளர்ச்சி, நன்மைகள்‌ மற்றும்‌ தீமைகள்‌, வேளாண்மை, நிறுவன மேலாண்மை, மருத்துவ கண்காணிப்பு மற்றும்‌ பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில்‌ IoT-ன்‌ பயன்பாடுகள்‌ பற்றி விரிவுரை வழங்கினார்‌.

இறுதிச்‌ சுற்றுக்குத்‌ தேர்வான 15 அணிகளில்‌ மூன்று அணிகள்‌ வெற்றி பெற்றது.



அதில்‌, சத்தியமங்கலம்‌ பண்ணாரி அம்மன்‌ தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள்‌ முதல்‌ பரிசாக ரூ.15,000-ம்‌, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள்‌ இரண்டாம்‌ பரிசாக ரூ.10,000-ம்‌,சென்னை செயின்ட்‌ ஜோசப்‌ பொறியியல்‌ கல்லூரி மாணவர்கள்‌ மூன்றாம்‌ பரிசாக ரூ.5,000-ம்‌ பெற்றனர்‌.



Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...