கோவை ரத்தினம் கல்லூரியில் அறிவுத்திறன் போட்டிகள் நாளை தொடக்கம்

கோவை ரத்தினம் கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ அனைத்துக் கல்லூரி பேராசிரியர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள்‌ நாளை காலை 9:30 மணியளவில்‌ கல்லூரி வளாகத்தில்‌ நடக்கிறது. இதில்‌ 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமார் 400-க்கும்‌ மேற்பட்ட பேராசிரியர்கள்‌ கலந்து கொள்கின்றனர்.


கோவை: ரத்தினம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ அனைத்துக் கல்லூரி பேராசிரியர்களுக்கான அறிவுத்‌ திறன்‌ போட்டிகள்‌ நாளை நடைபெறுகிறது.

ரத்தினம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ அனைத்துக்‌ கல்லூரி பேராசிரியர்களுக்கான அறிவுத்‌ திறன்‌ போட்டிகள்‌ நாளை காலை 9.30 மணியளவில்‌ கல்லூரி வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில்‌ 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 400-க்கும்‌ மேற்பட்ட கல்லூரிப்‌ பேராசிரியர்கள்‌ கலந்து கொள்ளவுள்ளனர்.

தனி நபர்‌ பாடல்‌, தனிநபர்‌ நடனம்‌, நகைச்சுவை, குழு நடனம்‌, நெருப்பின்றி சமையல்‌, ஓவியப்போட்டி, மெஹந்தி, மிஸ்‌. குருஷேத்திரா, மிஸ்டா்‌ குருஷேத்திரா, ரங்கோலி, வினாடி வினா, ஆம்‌ இல்லை இருக்கலாம்‌, கனெக்ஷன்‌, பொபைல்‌ போட்டோகிராப்பிக்‌, மை டேலன்ட்‌ உட்பட 16 போட்டிகள்‌ நடத்தப்பட உள்ளன.



இப்போட்டிகளினால்‌ மன மற்றும்‌ உடல்‌. நிலை சீராக அமைவது மட்டுமில்லாமல், மூளைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்‌ என்ற நோக்கத்தின்‌ அடிப்படையில்‌ நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய அவசர உலகில்‌ அறிவுத்திறன்‌ பயிற்சிகள்‌ தேவை என்ற நோக்கத்திலும்‌, புத்துணர்வு ஊட்டும்‌ வகையிலும்‌ சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வினைக்‌ கல்லூரிச்‌ செயலாளர்‌ முனைவர்‌ மாணிக்கம்‌ தொடங்கி வைக்கவுள்ளார். கல்லூரி முதல்வர்‌ பாலசுப்பிரமணியன்‌ சிறப்புரை ஆற்றவுள்ளார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...