கோவை ஈச்சனாரியில் Women Can 2.0 நிகழ்ச்சி - உற்சாகமாக பங்கேற்ற கல்லூரி மாணவிகள்!

ஈச்சனாரியில் பெண்கள் சர்வதேச ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் Women Can 2.0 எனும் நிகழ்ச்சியில், தொழில் துறையில் சாதிக்க நினைக்கும் மாணவிகளின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற Women Can 2.0 நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

கோவை ஈச்சனாரியில் உள்ள ஏ.ஐ.சி ரைஸ்-ல் பெண்கள் சர்வதேச ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் எனும் அமைப்பின் முயற்சியாக வுமென் கேன் (Women Can) 2.0 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.



பல்வகை தொழில் துறையில் சாதிக்க நினைக்கும் மாணவிகளின் திறனை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் தங்கள் படைப்பாற்றல் திறன்களால் சிறந்த தீர்வினை அளித்தனர்.



இதில் பெண்கள் நெட்வொர்க்கிங் கிளப்-ன் நிறுவனர் கேஸிக்கா ஜெயபாலன் மற்றும் தி எடி ஸ்டோரி-ன் நிறுவனர் தாமினி ஹரிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...