கோவை பார்க் கல்வி நிறுவனத்தில் துர்கா 2023 நிகழ்ச்சி - சாதனைப் பெண்களுக்கு விருது

உலக மகளிர் தினத்தை ஒட்டி கோவை பார்க் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த துர்கா 2023 எனும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா ரவி விருதுகளை வழங்கினார்.


கோவை: கோவையில் செயல்பட்டுவரும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்றான பார்க் இன்ஸ்டியூஷன்ஸ் சார்பில் கடந்த 11 ஆண்டுகளாக "துர்கா" என்ற பெயரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த நிர்பயா தாக்குதல் நினைவாக, பார்க் நிறுவனங்களில் மகளிர் தினக் கொண்டாட்டம் "துர்கா" என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.

கணியூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மகளிர் தின விழாவில், அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஏஜிஎம், ELGI எக்யூப்மென்ட்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த உமா ராணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மாணவ - மாணவியர் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்வு செய்வதற்கு ஏற்ப திறமையையும், அறிவினையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பார்க் இன்ஸ்டிடியூஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, பெண் சாதனையாளர்களை கவுரவித்தார். அப்போது பேசிய அவர், மாணவிகள் துணிச்சலுடனும் தைரியமுடனும் இருக்க வேண்டும், அப்படி இருந்தால் கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் எளிதாக வெளியேவர முடியும் என்றும் கூறினார்.

இந்த மகளிர் தின விழா கொண்டாட்டத்தில், சரோஜினி பழனிசாமி - இயற்கை விவசாயி, ஊஞ்சபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள், செல்வி.சங்கீதா, செல்வி.கிருத்திகா, செல்வி.ரஞ்சிதம், இயற்கை பண்ணை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பாளர் டாக்டர். எம் யமுனாதேவி சுரேஷ்குமார்,

25 ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றிவரும் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த பாலசரஸ்வதி, அவிநாசி சிருஷ்டி சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த ஆர் கல்பனா ஆகியோருக்கு பார்க் நிர்வாகத்தின் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, மாணவிகளின் கலாச்சார மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...