கோவை குமரகுரு கல்லூரியின் 'யுகம் 2023' விழா - 3வது நாளில் டெக் எக்ஸ்போ போட்டி!

கோவை குமரகுரு கல்லூரியின் யுகம் 2023 திருவிழாவின் 3ஆம் நாள் நிகழ்வில் நடைபெற்ற ஆர்.சி எக்ஸ்ட்ரீம் மற்றும் டெக் எக்ஸ்போ போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.90,000 மதிப்பிலான ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: குமரகுரு கல்லூரியில் யுகம் 2023 விழாவின் 3வது நாள் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.90,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் யுகம் 2023 என்ற கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய தொழில்நுட்ப கலாச்சார விழா கடந்த மார்ச் 2ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்வானது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகமூட்டும் நிகழ்வுகள், சுவாரஸ்யமான பட்டறைகள் மற்றும் பல்துறை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும்.

இந்த தொழில்நுட்ப - கலாச்சார திருவிழாவின் மூன்றாவது நாள் நடைபெற்ற பல்வேறு வகையான நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திருவிழாவில் 40க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், ஆர்.சி எக்ஸ்ட்ரீம் மற்றும் டெக் எக்ஸ்போ ஆகியவை முக்கிய நிகழ்வுகளாக கருதப்படுகிறது.



குமரகுரு வளாகத்தின் ஆர்.சி.டிராக்கில் நடத்தப்பட்ட ஆர்.சி.எக்ஸ்ட்ரீமானது, கன்ட்ரோலர் மற்றும் காரை உள்ளடக்கிய நிகழ்வு. பந்தய கட்டுப்பாட்டாளர்களே இதில் போட்டியிட்டதால் இந்த நிகழ்வு மிகுந்த பரபரப்பாக இருந்தது. பங்கேற்பாளர்கள், தென்னிந்தியாவின் முக்கிய ரேஸ் டிராக்குகளில் ஒன்றில், இதுபோன்ற பந்தயத்தை காணவும் போட்டியிடவும் காத்திருந்தனர்.

இந்த போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து அரவிந்த், வேலம்மாள் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் பண்ணாரியம்மன் கல்லூரியைச் சேர்ந்த விஜய் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். வெற்றியாளர்களின் விடா முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், ரூ.40,000 ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதனுடன், டெக் எக்ஸ்போ 2023 இன்றைய சவால்களுக்கு பதிலளிக்கும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களில் வளர்ந்து வரும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் முன்மாதிரிகள் அல்லது கருத்துகளின் ஆதாரத்தை பல்வேறு தொழில்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு காண்பிக்க ஒரு தனித்துவமான தளத்தை கொண்டு வந்தது. செயற்கை நுண்ணறிவு, வேளாண் தொழில்நுட்பம், ஹெல்த் டெக், ஸ்மார்ட்சிட்டி மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் ஆகியவை கண்டுபிடிப்புகளின் முக்கிய பிரிவுகளாகும்.

பிரசாந்த், கார்த்தி மற்றும் லுகிதா ஆகியோரைக் கொண்ட பண்ணாரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் எலக்ட்ரோ - டெக்கிகள் குழு வெற்றியாளர்களாகவும், கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜியை சேர்ந்த யுவேரா அணியின் லலித் கே, வருண்,லெவின் ஜோசப், உதயதரணிஷ் ஆகியோர் 2ஆம் இடத்தையும் பிடித்தனர். இவர்களின் படைப்புகள் பாராட்டப்பட்டு ரூ.50,000 ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...