கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் ஆராய்ச்சியுரை நிகழ்வு - மாணவர்களுக்கு வல்லுநர்கள் அறிவுரை

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி- ஓர் உட்பார்வை எனும் தலைப்பில் நடைபெற்ற ஆராய்ச்சி சார்ந்த உரை நிகழ்வில் மாணவர்களுக்கு வல்லுநர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.


கோவை: கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் ஆராய்ச்சி சார்ந்த உரையாடல் நிகழ்வில் வல்லுநர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சி குறித்து மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

கோவையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பன்னாட்டு தொடர் சொற்பொழிவின் ஓர் பகுதியாக “உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி - ஓர் உட்பார்வை“ எனும் தலைப்பில் இன்று ஆராய்ச்சி சார்ந்த உரை நிகழ்த்தப்பட்டது.



இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மலேசியாவில் உள்ள மலேயா பல்கலைக்கழக கட்டிடவியல் துறை பேராசிரியர் உபகாரம் ஜான்சன் அலங்காரம் சிறப்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் ஜேனட், சிறப்பு விருந்தினர், தலைமை விருந்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்று பேசினார். மேலும், இந்த ஆராய்ச்சி தொடர்பான சொற்பொழிவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே பேசிய அவர், மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் சாதிப்பது மிகவும் முக்கியமானது எனவும் கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா தலைமை உரையாற்றிய போது, ‘ஆராய்ச்சி‘ என்பது பற்றிய சிறந்த புரிதலை கொண்டிருக்க வேண்டும். கட்டிடவியல், பொறியியல் கற்கும் மாணவர்கள் இயந்திரவியல், பிளம்பிங், மின்னியல், நெட்வொர்க்கிங் போன்ற துறைகளை பற்றியும் சிறந்த புரிதல் மற்றும் அறிவை கொண்டிருக்க வேண்டும், என்றார்.

சிறப்பு விருந்தினர் தனது உரையில் பொறியியல் பட்டதாரி ஆவதற்கும், தொழில் ரீதியான பொறியாளர்கள் ஆவதற்குமான வேறுபாடு உள்ளது. சிறந்த பொறியாளர் ஆவதற்கான தகுதிகளை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

ஆய்வு யாருக்கு பயன்படுகிறது என்பதை அறிந்து அவர்களை சந்தித்து ஆராய்ச்சியின் தாக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சியின் பலன் சமூகத்தில் பயன்படத்தக்கதாய் இருக்க வேண்டும். கல்லூரியின் துறைகள் தங்களது துறை சார்ந்த, ஆய்வு சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரியின் கட்டிடவியல் பொறியியல் துறை தலைவர் முனைவர் டி. மருதாச்சலம் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் டீன்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...