கோவை கற்பகம் பல்கலையில் பிரணயா கலை நிகழ்ச்சி - மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பிரணயா - 2023 என்ற மாநிலஅளவிலான கலை மற்றும் நடனப்போட்டிகளில் 750-க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலை கழங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று திறமைமயை வெளிப்படுத்தினர்.


கோவை: கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பிரணயா - 2023 என்ற மாநிலஅளவிலான கலை மற்றும் நடனப்போட்டிகள் நடைபெற்றது.

கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பிரணயா - 2023 என்ற மாநில அளவிலான கலை மற்றும் நடனப்போட்டிகள் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்தும் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



தனிநபா் நடனம், குழுநடனம், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு, மருதாணிக்கலை மற்றும் முக ஓவியம் என பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்களுக்கு ரூ. 2லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படது.

இதில் தனிநபா் நடனத்தில் கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் ரோஹித் முதல் பரிசும், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் ராஜேஷ் இரண்டாம் பரிசும், கோவை நேரு கலை, அறிவியல்கல்லூரியின் கண்மணி மூன்றாம் பரிசும் வென்றனர்.

குழு நடனத்தில் கோயம்புத்தூர் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் நித்தீஷ் குழுவினர் முதல் பரிசும், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் கலைசெல்வன் குழுவினர் இரண்டாம் பரிசும், திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை, அறிவியல் கல்லூரியின் சத்தியசீலன் மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் ரீஹானுல் ஹஸன் குழுவினர் மூன்றாம் பரிசும் வென்றனர்.

பாட்டுப்போட்டியில் கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி மாணவி கௌசல்யா முதல் பாரிசும், கோயம்புத்தூர் அரசு இசைக் கல்லூரியின் ஆன்சிமேரி இரண்டாம் பரிசும், திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் அபய் அசோக் மற்றும் கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியன் மாணவர் கார்த்திகேயன் மூன்றாம் பரிசும் வென்றனர்.

பல்சுவைப் பொழுதுபோக்குப் போட்டியில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை, அறிவியல் கல்லூரியின் கண்ணதாசன் குழுவினர் முதல் பரிசும், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் அல்தாஃப் குழுவினர் இரண்டாம் பரிசும், திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் சுரேஷ் குழுவினர் மூன்றாம் பரிசும் வென்றனர்.

மருதாணிக்கலைப் போட்டியில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை, அறிவியல் கல்லூரியின் பவித்ரா முதல் பரிசும், கோயம்புத்தூர் இரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின் மாணவி அர்ச்சனா இரண்டாம் பரிசும், பெருந்துறை கே.எம்.ஆர் மருந்தியல் கல்லூரியின் மாணவி சுவாதினி மூன்றாம் பரிசும் வென்றனர்.

முகஓவியப் போட்டியில் தேனி மேரிமாதா கலை, அறிவியல் கல்லூரியின் அபிலின் ரோஸ் பெனி, அஷ்மி பாபு குழுவினர் முதல் பாரிசும், ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் மாணவி சுபஸ்ரீ, ஹரிப்ரியா குழுவினர் இரண்டாம் பரிசும், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் லட்சுமிநாராயணன், மணி குழுவினர் மூன்றாம் பரிசும் வென்றனா்.

அடாப் ட்யூன் போட்டியில் கோயம்புத்தூர் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முகமது ஆசிஃப் முதல் பரிசும், கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் சசிகுமார் இரண்டாம் பரிசும், திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை, அறிவியல் கல்லூரியின் ஐஸ்வர்யா மூன்றாம் பரிசும் வென்றனர்.



முன்னதாக கடந்த 23ஆம் தேதி கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவா்களுக்கான கலை மற்றும் நடனப்போட்டிகளும், தொழில்நுட்பத் போட்டிகளும், துறைவாரியாக நடத்தப்பட்டு மாணவா்களுக்குப் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கலை நிகழ்வைக் கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக் கழக மாணவா்நலன் முதன்மையா், முனைவா் தமிழரசி, நுண்கலை மன்றப் பொறுப்பாளர் முனைவர் பரத்குமார் ஆகிய இருவரும் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...