பாரதியார் பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் விண்ணப்பிக்கத் தேதி அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 03 முதல் மார்ச் 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பாரதியார் பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பாரதியார் பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் பயில மார்ச் 31ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி இயக்கம் 9 ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது, இதில் மூன்று இளங்கலை (பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ. மற்றும் பி.காம்) மற்றும் ஆறு முதுகலை (எம்.ஏ. தமிழ் இலக்கியம், எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்.ஏ. பொருளாதாரம், எம்.காம்., எம். .காம் (நிதி மற்றும் கணக்கியல்) எம்.ஏ(தொழில் வழிகாட்டுதல்).

நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கை, கட்டணம் செலுத்துதல், வகுப்புகள், ஆய்வுப் பொருட்கள், மதிப்பீடுகள் (தேர்வுகள்) மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் அனைத்தும் யுஜிசி விதிமுறைகளின்படி ஆன்லைன் மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கட்டண விவரம் மற்றும் பிற கல்வி கேள்விகள் தொடர்பாக பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியின் இணையதளத்தைப் பார்வையிடலாம் என பல்கலை கழக தொலைத்தூர கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...