கற்பகம் மருந்தியல் கல்லூரியில் சர்வதேச 2 நாள் கருத்தரங்கம் - 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் உள்ள கற்பகம் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற “மருந்துகளின் அளவு வடிவத்தில் காணும் வளர்ச்சி” குறித்த சர்வதேச 2 நாள் கருத்தரங்கில் 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கற்பகம் மருந்தியல் கல்லூரியில் “மருந்துகளின் அளவு வடிவத்தில் காணும் வளர்ச்சி” குறித்த சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது.

மருந்தியல் ஆராய்ச்சி துறையின் முன்னேற்றங்கள் குறித்த இந்த 2 நாள் கருத்தரங்கில் கற்பகம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். வசந்தகுமார் தலைமை வகித்தார். மெடோபார்ம் குழுமத்தின் தலைமை அதிகாரி, சஞ்சய் தஸ்மோகபத்ரா மற்றும் கற்பகம் உயர் கல்வி நிலையத்தின் துணைவேந்தர், டாக்டர். வெங்கடாசலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.



எஸ்.எஸ்.எம் மருந்தியல் கல்லூரியின் முதல்வர், டாக்டர். சங்கமேஸ்வரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தலைமை நிர்வாக அதிகாரி, முருகையா மற்றும் கற்பகம் மருந்தியல் கல்லூரியின் முதல்வர், டாக்டர். மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



மருந்தியலில் சிறந்த விஞ்ஞானிகளான, மலேசியாவில் உள்ள ஏ.ஐ.எம்.எஸ்.டி பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் பகுதி தலைவருமான டாக்டர். வெங்கடேஷ் குமார், கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர். நயனபிராம உடுப்பா மற்றும் பெங்களூரில் உள்ள ஹிமாலயா ஆரோக்கிய நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர். விஜயகுமார் ஆகியோர் விரிவுரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து கற்பகம் மருந்தியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் முதலாம் நாள் நிறைவு பெற்றது.

இக்கருத்தரங்கின் மூலம் மருந்தியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உயிர்காக்கும் மருந்துகளை எவ்வாறு வடிவமைப்பது கையாளுவது மற்றும் சிறந்த முறையில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் விநியோகிப்பது என்பதை சர்வதேச அளவிலான கைதேர்ந்த மருந்தியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடி கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கும் ஏதுவாய் அமையும்.

நாடு முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...