கோவை வேளாண் பல்கலையில் EcoFest-23 என்ற சர்வதேச மாநாடு - மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற EcoFest-23 என்ற ஆற்றல் மாற்றம்‌ மற்றும்‌ காலநிலை நடுநிலைமை குறித்த சர்வதேச மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் பங்கேற்று மாநாட்டு மலர்களை வெளியிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்தார்.


கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் பங்கேற்று மாநாட்டு மலர்களை வெளியிட்டார்.



கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் எரிசக்தி மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌ துறையின்‌ சார்பில் EcoFest 23 ஆற்றல் மாற்றம்‌ மற்றும்‌ காலநிலை நடுநிலைமை” குறித்த சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது.



இந்த மாநாட்டை வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ கீதாலட்சுமி‌ தொடங்கி வைத்தார். ஆற்றல்‌ மாற்றம்‌ மற்றும்‌ காலநிலை நடுநிலைமையின்‌ முக்கியத்துவம்‌ குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்‌. இந்த நிகழ்வில் வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரியின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ரவிராஜ்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.



கோவை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌, தனது சிறப்புரையில்‌ புவி வெப்பமயமாதலால்‌ வேளாண்மையில்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ மூலம்‌ அதன்‌ உற்பத்தியில்‌ உண்டாகும்‌ பாதிப்புகள்‌ குறித்து விளக்கினார்‌. மேலும்‌ பல்வேறு துறைகளைச்‌ சேர்ந்த விருந்தினர்கள்‌ இம்மாநாட்டில்‌ பங்கேற்றனர்‌.

இந்த சர்வதேச மாநாட்டின்‌ மலர்களை சிறப்பு விருந்தினர்களும்‌ பல்கலைக்கழக துணை வேந்தரும்‌ இணைந்து வெளியிட்டனர்‌.



மாணவர்கள்‌ மாநாட்டு வளாகத்தை கழிவுகளிலிருந்து கலைநயத்துடன்‌ புதுமையாக அலங்கரித்ததும்,‌ மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும்‌ சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்தன.

முன்னதாக, மாணவர்‌ அமைப்புச்‌ செயலர்‌ ஏஞ்சலா ஜெயசன்‌ வரவேற்றுப்‌ பேசினார்‌, முடிவில்‌ மாணவர்‌ அமைப்புச்‌ செயலாளர்‌ யோகேஷ்வர்‌ நன்றியுரை ஆற்றினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...