கோவையில் சிறுவாணி இலக்கியத் திருவிழா - நடிகர் சிவகுமார், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்பு

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் சிறுவாணி இலக்கியத் திருவிழாவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடக்கி வைத்தார். நடிகர் சிவக்குமார் பங்கேற்று மாணவர்களிடையே பேசினார்.


கோவை: பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் நடைபெற்ற சிறுவாணி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் சிறுவாணி இலக்கியத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொது நூலக இணை இயக்குநர் அமுதவல்லி, பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் பிருந்தா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் திரைக்கலைஞர் சிவகுமார், அறிஞர் எஸ்.வி. ராஜதுரை, எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவானது இலக்கியப் படைப்புகள், பண்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக மிகச்சிறந்த ஆளுமைகளின் உரையாடலுடன் இலக்கிய அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசும்போது, சிறுவாணி ஆறுக்கென்று தனித்தன்மையான வரலாறும், மரபும், மக்களும், அவர்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கியங்களும் பண்பாடு சார்ந்த படைப்புகளும் கொண்டது நமது தமிழ்மொழி, இத்தகைய இலக்கியங்களை இந்தத் தலைமுறையில் கொண்டாடவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவும் இந்த சிறுவாணி இலக்கியத்திருவிழா

அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களும் மாணவர்களும், மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் நமது கலாச்சாரம் சார்ந்த நாடகம் மற்றும் நிகழ்கால கலைகளும் நடைபெறவுள்ளன. விழா நடைபெறும் இக்கல்லூரியில் புத்தகக்காட்சி மற்றும் பழங்குடியின புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.



இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்து பேச்சுப்போட்டி கவிதைப்போட்டி, இலக்கிய வினாடி வினா எனப் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் நடைபெறுகின்ற சிறுவாணி இலக்கியத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அகமும் புறமும் சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடனும், வரலாறு வழிகாட்டும் என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரனும், நற்கவிதைகளைக் கண்டடைதல் என்ற தலைப்பில் மோகன ரங்கன் மற்றும் அவை நாயகன் ஆகியோரும், புதிய தலைமுறையின் கதைகள் என்ற தலைப்பில் அகரம், இளஞ்சேரல் மற்றும் செந்தில் ஆகியோரும், தமிழ்ச் சிறுகதைகளில் வட்டார வாழ்வியல் என்ற தலைப்பில் ஸ்ரீராம், காந்தியும் எழுத்துலகும் என்ற தலைப்பில் கண்ணனும் உரையாற்றினர்.

மேலும், பழங்குடியினர் இலக்கியம் - குரலற்றவர்களின் குரல் என்ற தலைப்பில் பாலமுருகன், நிகழ்கலைகளும் நவீன இலக்கியமும் என்ற தலைப்பில் ஹரிகிருஷ்ணன் திரைக்கலையும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஜீவானந்தன், தமிழ் இலக்கியம் - எனது சாட்சியம் என்ற தலைப்பில் மதிவண்ணன், தமிழின் விமர்சன மரபு என்ற தலைப்பில் பொதியவெற்பன் மற்றும் ராமசாமி ஆகியோரும், வாசிப்பை வளர்ப்பதில் பதிப்புத்துறையின் பங்களிப்பு என்ற தலைப்பில் விஜயா வேலாயுதம் மற்றும் அகிலா ஆகியோரும், நிகழ்த்துக் கலைகள் என்ற தலைப்பில் ராம்ராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...