கோவை கற்பகம் பல்கலையில் 'பிரணயா - 2023' கலைவிழா - 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

கோவை கற்பகம்‌ நிகர்நிலைப்‌ பல்கலைக்கழகத்தில் 'பிரணயா - 2023' என்ற கலைவிழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ரொக்கப் பரிசுகளை வென்று அசத்தினர்.


கோவை: கோவையில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலை கழகத்தில் நடைபெற்ற கலைவிழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



கோவையில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 'பிரணயா - 2023' என்ற மாநில அளவிலான கலை மற்றும்‌ நடன போட்டிகள்‌ நடைபெற்றன.



கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழகத்தின்‌ பல்வேறு பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ கல்லூரிகளிலிருந்தும்‌ 750-க்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.





இந்நிகழ்வில்,‌ தனிநபர்‌ நடனம்‌, குழு நடனம்‌, பாட்டு, பல்சுவை‌ பொழுதுப்போக்கு, மருதாணி கலை மற்றும்‌ முக ஓவியம்‌ என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.



இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ரொக்க பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

தனிநபர்‌ நடனத்தில்‌ கோவை‌ ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ ரோஹித்‌ முதல்‌ பரிசும்‌, திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின்‌ ராஜேஸ்‌ இரண்டாம்‌ பரிசும்‌, கோவை நேரு கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ கண்மணி மூன்றாம்‌ பரிசும்‌ வென்றனர்‌.

குழு நடனத்தில்‌ கோவை ஸ்ரீ சக்தி பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரி‌ மாணவர்‌ கே. நித்தீஸ்‌ குழுவினர்‌ முதல்‌ பரிசும்‌, திருச்சி தனலட்சுமி கல்லூரியின்‌ கலைசெல்வன்‌ குழுவினர்‌ இரண்டாம்‌ பரிசும்‌, திருச்சி ஸ்ரீமத்‌ ஆண்டவர்‌ கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ சத்தியசீலன்‌ மற்றும்‌ திருச்சி ஜமால்‌ முகமது கல்லூரியின்‌ ரீஹானுல்‌ ஹஸன்‌ குழுவினர்‌ மூன்றாம்‌ பரிசும்‌ வென்றனர்‌.

பாட்டுப் போட்டியில்‌ கோவை‌ அரசு சட்டக்‌ கல்லூரி மாணவி கெளசல்யா முதல்‌ பரிசும்‌, கோவை‌ அரசு இசை கல்லூரியின்‌ ஆன்‌சிமேரி இரண்டாம்‌ பரிசும்‌, திண்டுக்கல்‌ காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்‌ அபய்‌ அசோக்‌ மற்றும்‌ கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ ஆர்‌.கார்த்திகேயன்‌ மூன்றாம்‌ பரிசும்‌ வென்றனர்‌.

பல்சுவைப்‌ பொழுதுபோக்கு‌ போட்டியில்‌ திருச்சி ஸ்ரீமத்‌ ஆண்டவர்‌ கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ கண்ணதாசன்‌ குழுவினர்‌ முதல்‌ பரிசும்‌, திருச்சி ஜமால்‌ முகமது கல்லூரியின்‌ அல்தாஃப்‌ குழுவினர்‌ இரண்டாம்‌ பரிசும்‌, திண்டுக்கல்‌ காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்‌ சுரேஷ்‌ குழுவினர்‌ மூன்றாம்‌ பரிசும்‌ வென்றனர்‌.

மருதாணி கலைப்‌ போட்டியில்‌ திருச்சி ஸ்ரீமத்‌ ஆண்டவர்‌ கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ பவித்ரா முதல்‌ பரிசும்‌, கோவை ரத்தினம்‌ கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ அர்ச்சனா இரண்டாம்‌ பரிசும்‌, பெருந்துறை கே.எம்‌.ஆர்‌ மருந்தியல்‌ கல்லூரியின்‌ சுவாதினி மூன்றாம்‌ பரிசும்‌ வென்றனர்‌.

முக ஓவியப்‌ போட்டியில்‌ தேனி மேரிமாதா கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ அபிலின்‌ ரோஸ்‌ பெனி, அஸ்மி பாபு குழுவினர்‌ முதல்‌ பரிசும்‌, ஈரோடு கொங்கு கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ சுபஸ்ரீ, ஹரிப்ரியா குழுவினர்‌ இரண்டாம்‌ பரிசும்‌, திருச்சி ஜமால்‌ முகமது கல்லூரியின்‌ லட்சுமி நாராயணன்‌, எஸ்‌.மணி குழுவினர்‌ மூன்றாம்‌ பரிசும்‌ வென்றனர்‌.

அடாப்‌ ட்யூன்‌ போட்டியில்‌ கோவை ஸ்ரீ சக்தி பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்கல்லூரியின்‌ எஸ்‌. முகமது ஆஃப்‌ முதல்‌ பரிசும்‌, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ சுகுமார்‌ இரண்டாம்‌ பரிசும்‌, திருச்சி‌ ஸ்ரீமத்‌ ஆண்டவர்‌ கலை, அறிவியல்‌ கல்லூரியின்‌ ஐஸ்வர்யா மூன்றாம்‌ பரிசும்‌ வென்றனர்‌.

முன்னதாக கடந்த 23ஆம் தேதி கற்பகம்‌ நிகர்நிலைப்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலை மற்றும்‌ நடன போட்டிகளும்‌, தொழில்நுட்ப‌ திறன்சார்‌ போட்டிகளும்‌, துறைவாரியாக நடத்தப்பட்டு மாணவர்களுக்குப்‌ ரொக்கப் பரிசுள்‌ வழங்கப்பட்டன.

இக்கலை நிகழ்வை‌ கற்பகம்‌ நிகர்நிலைப்‌ பல்கலைக்கழக மாணவர் நலன்‌ முதன்மையர்‌, முனைவர்‌ தமிழரசு‌, நுண்கலை மன்ற பொறுப்பாளர்‌ முனைவர்‌ பரத்குமார்‌,‌ ஒருங்கிணைத்தனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...