'எனது வாக்கு விற்பனைக்கு இல்லை..!' - கோவையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.


கோவை: கோவை தேசிய வாக்காளர் தினத்தை அனுசரிக்கும் வகையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை, குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், மண்டல காவல்துறை அதிகாரிகள், அனைத்துத்துறை பிரதிநிதிகள், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேரணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



"வாக்கு எங்கள் உரிமை", "எனது வாக்கு விற்பனைக்கு இல்லை" என்பன உள்ளிட்டவிழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியபடி பேரணியில் கலந்துகொண்டனர்.



மேலும், வாக்காளர்களின் உரிமை, வாக்குகளை விற்கக் கூடாது என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் பேரணியில் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...