பல்லடத்தில் அறிவியல் கண்காட்சி - தமிழர் கட்டிட பொறியியல் குறித்து பள்ளி மாணவர்கள் விளக்கம்!

பல்லடத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தமிழர்களின் கட்டட பொறியியல் அதிசயங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் எளிமையாக தமிழில் விளக்கம் அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தமிழர்களின் கட்டிட பொறியியல் அதிசயங்கள் குறித்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.



பல்லடம் அருகே குங்குமபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் சார்பில் மெய்ப்பொருள் என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.



சிறுவயது முதலே குழந்தைகளுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



தமிழர்களின் அறிவியல் நுட்பங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் தமிழ் என்ற சிறப்பு அரங்கு, பறவைகள் மீதான புரிதலையும் அன்பையும் மாணவர்கள் அதிகரித்துக் கொள்ளும் வகையில் புல்லினங்கால் என்ற சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக Accenture நிறுவனத்தின் இயக்குநர் வேலேஸ்வரன் நல்லையா கலந்துகொண்டார்.



இந்த கண்காட்சியில் தஞ்சை பெரிய கோவில், கரிகாலன் கட்டிய கல்லணை ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டு அவற்றின் கட்டிட பொறியியல் அதிசயங்கள் குறித்து மாணவ -மாணவிகள் தூய தமிழில் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.



கண்காட்சியில் ஏராளமான பறவைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...