கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி கலை இலக்கியப் போட்டி - சுழற்கோப்பையை வென்ற பாரதியார் பல்.கலை அணி!

கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'ழகரலிஷ்' எனும் தலைப்பில் கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. 25 போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி ஒட்டுமொத்த சுழற்கோப்பையினை வென்றது.


கோவை: கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, “ழகரலிஷ்” எனும் தலைப்பில் கலை இலக்கியப் போட்டிகள் மொழி துறையின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 25 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. 29 கல்லூரிகளிலிருந்து 372 மாணவர்கள் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்திப்பரிசுகளை அள்ளிச் சென்றனர்.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சுவிஸ் அசோசியேட்ஸ் இயக்குநர் K.செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் R.ஜெகஜீவன் தலைமை உரையாற்றினார். மொழித்துறையின் தலைவர் முனைவர் R.விஜயசாமுண்டீஸ்வரி துவக்க விழா உரையாற்றினார். கல்லூரியின் 25 -ம் ஆண்டு வெள்ளி விழாவின் நிறைவாக ஒட்டுமொத்த சுழற்கோப்பையினை கோவை பாரதியார் பல்கலைக் கழகம் தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...