கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் மேலாண்மை விழா - மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான மேலாண்மை விழாவில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற மேலாண்மை விழாவில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மேலாண்மை விழா நடத்தப்பட்டது.

மேலாண்மை பிரிவு மாணவர்கள், நிர்வாக மனப்பான்மையை வெளிக்கொண்டு வருவது, மேலாண்மை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த மேலாண்மை விழா நடத்தப்பட்டது.

கோயம்புத்தூர் ஆர்.எம்.சி.எஸ்.எல்.எல்.பி நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் ஆர்.ஹரிராம் விழாவை துவக்கி வைத்து பேசியதாவது,

வெற்றி பெறுவது முக்கியமல்ல. தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். தோல்வி பல புதிய யோசனைகள், உத்திகள் மற்றும் வெற்றி மற்றும் நிலைநிறுத்துவதற்கான வழிகளை வழங்குகிறது. மாணவர்கள் சீரானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்க வேண்டும்.

தொழில்துறைக்கு விசுவாசமான மற்றும் திறமையான பணியாளர்கள் தேவை. வேலைச்சந்தையில் நிறுவனம் எதிர்பார்க்கும் அறிவு மற்றும் திறன்களை வளப்படுத்துவதுடன், மாணவர்களிடம் நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ள 25 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இளங்கலைக்கான 5 நிகழ்வுகள் மற்றும் முதுகலைக்கான 5 நிகழ்வுகள் நடத்தப்பட்டன. விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த கோப்பையை குமரகுருபரன் ஆர்ட்ஸ் யுஜி மாணவர்களும், எம்பிஏவுக்கான கோப்பையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக எம்பிஏ மாணவர்களும் வென்றனர்.

இக்கல்லூரியின் முதல்வர் ஆர்.ஜெகஜீவன் தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.

என்.நிர்மலா தேவி துறைத்தலைவர், ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி. பி.ராஜன், டீன், மேலாண்மை அறிவியல், துறைத் தலைவர் ஜூலியன் ஞான தாஸ், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...