பார்க் பொறியியல் கல்லூரியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த துருக்கி மக்களுக்கு அஞ்சலி

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக அமைதி ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


கோவை: பார்க் பொறியியல் கல்லூரியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த துருக்கி,சிரியா நாட்டு மக்களுக்கு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மெழுகுதிரி ஏந்தி ஊர்வலமாக நடந்து வந்து துருக்கி நாட்டின் வரைபடத்திற்கு அருகில் வந்து உயிர் இழந்தவர்களுக்காக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் பேசிய பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி, துருக்கி மற்றும் சிரியா நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிக ஆற்றல் வாய்ந்த நில நடுக்கங்களில் ஒன்றாகும்.

இந்த நாடுகளுக்கு இந்தியா துரிதமாக மீட்புக் குழுவையும், உபகரணங்களையும் அனுப்பி வைத்து உதவியது.பாதிக்கப்பட்ட இந்த நாட்டிற்கு எப்படி உதவலாம் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்காகவும், இன்னும் இந்த பாதிப்பிலிருந்து மீளாதவர்களுக்காகவும், நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...