மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்சில் 2வது முறையாக பங்குபெறும் குமரகுருவின் டீம் சீ சக்தி குழு

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் (KCT) இருந்து இந்தியாவைப் பறைசாற்றும் விதமாக டீம் சி சக்தி என்னும் இக்குழு இரண்டாவது முறையாக மொனாக்கோ எனர்ஜி படகு சவால் (MEBC) 2023-ல் பங்கேற்க உள்ளது.


கோவை: மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்சில் இரண்டாவது முறையாக குமரகுருவின் டீம் சீ சக்தி குழு பங்குபெறுகிறது.

யாக்ட் கிளப் டி மொனாக்கோ (YCM)-ஆல் நடத்தப்படும் MEBC 2023, இந்த ஆண்டு ஜூலை 3 முதல் 8 வரை சிறப்பாக நடைப்பெற உள்ளது. மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச், படகுக் கட்டுமான தொழில்நுட்பத்தில் ஆண்டுதோறும் புதிய முயற்சிகளை வரவேற்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது.

கடல்சார் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில் முன் அனுபவம் இல்லாமல், டீம் சீ சக்தியால் கடந்த ஆண்டு மின்சாரத்தில் இயங்கும் கட்டுமரம் ஒன்றை உருவாக்க முடிந்தது. 310கிலோவுக்கும் குறைவான எடைக்கொண்ட இக்கட்டுமரம், லித்தியம் அயன் பேட்டேரிகள் மூலமாகவும் சோலார் பேனல்கள் மூலமாகவும் செயல்பட்டது.

இந்தியா சார்பாக MEBC-இல் பங்கேற்ற முதல் அணி என்ற வரலாற்றை டீம் சீ சக்தி படைத்தது. இந்த அணி உலகளவில் ஆற்றல் சார்ந்த பிரிவில் 6 வது இடத்தைப் பெற்றது. போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த அணி, தகவல் தொடர்பு பரிசையும் வென்றது.

20-க்கும் மேற்பட்ட நாடுகள் கடல் போக்குவரத்தில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணையும் இப்போட்டியில் இரண்டாவது முறையாக வாகை சூட டீம் சீ சக்தி தயாராக உள்ளது.

வெற்றி பெறும் நோக்கத்துடனும், நிலையான வருங்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடனும், ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது டீம் சீ சக்தி. "இது இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் கட்டுமரம் ஆற்றல் படகு ஆகும். மேலும், வரும் காலங்களிலும் பல மாணவர்களுக்கு அரிய வாய்ப்புகளை இத்தொழில்நுட்பம் வழங்கும் என்பது உறுதி,” என்று உதவி பேராசிரியர் எஸ் கிரண்லால் கூறியுள்ளார்.

இவ்வாண்டு டீம் சீ சக்தி, ‘ப்ரொப்பெல் - சோன்’ என்ற பெயரில் அசிமுத் வகை அதிவேக மின்சார உந்துவிசை அமைப்பைக் கட்டமைத்துள்ளதாகத் தெரிவித்தார். சீ சக்தியின் இந்த உந்துவிசை அமைப்பே இந்தியச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முதல் அசிமுத் வகை மின்சார உந்துவிசை அமைப்பாகும்.

தற்சமயம், டீம் சீ சக்தியானது இருபது கிலோவிற்கும் குறைவான எடையுடைய விமானி அறையை கட்டமைக்கும் கட்டத்திலும் அதை உற்பத்தி செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். டீம் சீ சக்தியின் உந்துவிசை ஆய்வாளர் அஞ்சனா பிரசாத் தனது அணியை பற்றி குறிப்பிடுகையில் ஓர் ஆண்டுக்கு முன் எவ்வித முன்னனுபவமும் இல்லாத அணியாக இருந்தனர். இப்பொழுது, கடல்சார் உந்துவிசை அமைப்பு மற்றும் எரிபொருள் கலம சார்ந்த துணைக்குழுவையும் இந்த அணி கொண்டுள்ளது.

டீம் சீ சக்தி, ‘மொனாகோ எனர்ஜி போட் சேலஞ்ச் 2023இல் மேலும் திறம்பட செயல்பட தயாராக உள்ளது. ஏனென்றால், இப்போட்டியின் வெற்றியானது, வருங்காலத்தில் மாற்று சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அமையும் என்று அவர் கூறினார்.

டீம் சீ சக்தி தற்சமயம் படகு தயாரிக்கும் கட்டத்திலும் இந்த விரிவான செயல்திட்டத்திற்கான ஸ்பான்சர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில், முதல் முன்னெடுப்பில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை ஒரு ஆற்றல் படகில் புகுத்தி கட்டமைப்பது சாதாரண காரியம் அல்ல.

தளவாடங்களைப் பொருத்தவரையில், அது அணிக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. ஏனென்றால், விமானி அறையை மொனாகோ வரை கொண்டு சென்று வருவதற்கு 15–20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மேலும் செயல்திட்டத்தின் மொத்த செலவானது, பதிவுக்கட்டணத்தில் தொடங்கி, பாகங்களை வாங்குவது, கப்பலைக் கட்டமைப்பது, தளவாடங்கள், பயணம் மற்றும் மாணவர்களுக்கான தங்கும் வசதி என மொத்த நிகழ்விற்கும் கிட்டத்தட்ட 55 லட்சம் ரூபாய் செலவாகக் கூடும்.

டீம் சீ சக்தி அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நேர்படச் செயல்பட ஸ்பான்சர்களை தேடிக்கொண்டு வருகிறது. நம் நாட்டின் வெற்றிக்காகவும் நிலையான வருங்காலத்தை உருவாகும் நோக்குடனும் பாடுபடும் டீம் சீ சக்தி அணியின் பயணத்தில் தங்களுடன் இணைந்து செயல்பட அழைக்கிறது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...