உடுமலை அருகே வனச்சரகம் சார்பில் ஓவியம், கட்டுரை போட்டி - மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

உடுமலை அடுத்த குமரலிங்கம் அரசு பள்ளியில் வனச்சரகம் சார்பில் நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியில் ஏராளமான மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற வனப்பாதுகாப்பு குறித்த ஓவிய போட்டியில் மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் கொழுமம் வனச்சரகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், உடுமலை அடுத்த குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'வனப்பாதுகாப்பு மற்றும் ஈரநிலம்' என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

வனவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை பள்ளியின் தலைமையாசிரியர் மாரியப்பன் துவக்கி வைத்தார். இப்போட்டிகளை ஆசிரியர்கள் மாரிமுத்து, மயில்சாமி, மதன்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள், தாலுகா அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...