உடுமலையில் குரூப்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் உள்ள மாதிரி நூலகம் கிளை ஒன்றில் குரூப்-2 தேர்வுக்காகத் தயாராகி வரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் குரூப்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குக் கடந்த ஒரு மாத காலமாக உடுமலை பயிற்சி மையத்தில் அவர்கள் பயிற்சி பெற்று எழுதிய மாதிரி தேர்வு விடைத்தாள்களைத் திருத்தி, ஆய்வு செய்து அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்.



தற்போது ஒரு மாத காலமாக உடுமலை சர்தார் வீதி எக்ஸ்டென்ஷன் பார்க் பள்ளியில் நடைபெறும் திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறையால் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற சுமார் 30 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...