ஆச்சார்யா என்.ஜி.ரங்கா வேளாண் பல்கலையுடன் கோவை வேளாண் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுகலை மாணவர்களின்‌ பயிற்சி மற்றும்‌ ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ குண்டூர்‌ ஆச்சார்யா என்.ஜி.ரங்கா வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌.


கோவை: கோவை வேளாண் பல்கலை மாணவர்களின் நலனுக்காகப் ஆச்சார்யா என்.ஜி.ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கோவை வேளாண் பல்கலைக் கழக முதுகலை மாணவர்களின்‌ பயிற்சி மற்றும்‌ ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இன்று தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ ஆச்சார்யா என்‌. ஜி.ரங்கா வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ குண்டூர்‌ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.



ஆந்திர மாநிலம் குண்டூரில்‌ உள்ள ஆச்சார்யா என்‌.ஜி.ரங்கா வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தைச்‌ சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளான முனைவர் விஷ்ணுவர்தன்‌ ரெட்டி, துணைவேந்தர்‌ மற்றும்‌ முனைவர்‌ ராமாராவ்‌, பதிவாளர்‌ ஒப்பந்தம்‌ கையெழுத்திடுவதற்காகத் தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தனர்‌.

முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகத்தின்‌ உதவி பேராசிரியை முனைவர்‌ வனிதா வரவேற்றார்‌. கோயம்புத்தூர்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முதன்‌ மையர்‌ (முதுகலை பட்டமேற்படி ப்பு பயிலகம்‌) முனைவர்‌ செந்தில்‌ தனது அறிமுக உரையில்‌, இந்தக்‌ கல்விக்‌ கூட்டுறவின்‌ இன்றியமையாமை பற்றிக்‌ குறிப்பிட்டார்‌.

அதிகாரிகள்‌, முனைவர்‌ தமிழ்வேந்தன்‌, பதிவாளர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ , கோயம்புத்தூர்‌ மற்றும்‌ முனைவர்‌ ராமாராவ்‌, பதிவாளர்‌, ஆச்சார்யா என்‌.ஜி.ரங்கா வேளாண் பல்கலைக்கழகம்‌, குண்டூர்‌ ஆகியோர்‌ முனைவர்‌.கீதாலட்சுமி, துணைவேந்தர்‌, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ முனைவர்‌ விஷ்ணுவர்தன்‌ ரெட்டி, துணைவேந்தர்‌, ஆச்சார்யா என்‌.ஜி.ரங்கா வேளாண் பல்கலைக்கழகம்‌, குண்டூர்‌ முன்னிலையில்‌ மாணவர்களின்‌ நலனுக்கான ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

பல்கலைக்கழக அதிகாரிகளான, முனைவர்‌ ரவிகேசவன்‌, இயக்குநர்‌ (பயிர்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ மையம்‌, முனைவர்‌ கலாராணி, இயக்குநர்‌ (பயிர் மேலாண்மை), முனைவர்‌ ஜெயக்குமார்‌, இயக்குநர்‌ (திட்டமிடல்‌ மற்றும்‌ கண்காணிப்பு), முனைவர்‌ ரவீந்திரன்‌, இயக்குநர்‌ (ஆராய்ச்சி), முனைவர்‌ பாலசுப்ரமணி, தேர்வு‌ கட்டுப்பாட்டாளர்‌ மற்றும்‌ முனைவர்‌ கணேசன்‌, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, தீவனப்‌ பயிர்கள்‌ துறை, தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம்‌ ஆகியோர்‌ கையெழுத்திடும்‌ நிகழ்வில்‌ கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்‌. முனைவர்‌ கோபாலின் நிறைவுரையுடன்‌ கூட்டம்‌ நிறைவுற்றது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...