கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பீடத்தில் இளைஞர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பீட வளாக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி டிஎஸ்பி பிருந்தா, மாணவர்களிடையே சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பீட வளாக அரங்கில் இளைஞர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.பிருந்தா கலந்து கொண்டார்.

மேலும் கற்பகம் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அன்பு ந.அறவிழி, மருத்துவக் கண்காணிப்பாளர்கள் டாக்டர் ரங்கநாதன், டாக்டர் வீரகேசரி உள்ளிட்ட கற்பகம் ஆசிரியப் பெருமக்கள், மருத்துவர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மனநல மருத்துவப் இதில் பிரிவு மருத்துவர்கள் நேரம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் குறித்த விவாதத்தை முன்வைத்தனர்.

மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இளைஞர்கள் விழிப்புணர்வு குறித்த சிந்தனையைத் தூண்டும் குறும்பட, மைம், நடனம் ஆகியவற்றை நிகழ்த்தினர்.



பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.பிருந்தா, இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்களின் இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சைபர் உலகம் மற்றும் இன்றைய இளைஞர்களுக்கு அது ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றிய நுண்ணறிவை வழங்கினார்.

இணைய குற்றங்களின் ஆபத்துக்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மாணவரும் மனதில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்களை விளக்கினார்.

பாலின ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த அவரது மதிப்புமிக்க அறிவுரைகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...