வட்டமலை பாளையத்தில் தனியார் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்

வட்டமலை பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்திய யாளி-2023 என்ற கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகள்.



கோவை: வட்டமலை பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த யாளி-2023என்ற நிகழ்ச்சியில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

கோவை துடியலூரை அடுத்த வட்டமலைப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு தமிழ் மன்றம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து யாளி-2023 என்ற தலைப்பில கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையேயான கலை, இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.



இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அலமேலு முன்னிலை வகித்தார். தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன், அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் எழுத்தாளரான கவிஞர் ஆதவன் தீட்சண்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.



விழாவின் ஒரு பகுதியாகத் திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியைச் சேர்ந்த கவிஞர் மற்றும் எழுத்தாளரான முனைவர் பரமசிவன் தலைமையில் “இன்றைய இளைஞரின் வாழ்க்கைப் போராட்டம் சுய முன்னேற்றத்திற்காகவா அல்லது சமூக முன்னேற்றத்திற்காகவா என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, மௌன நாடகம், பறை இசை, பேச்சு, கவிதை, தனிநபர் நடிப்பு, கிராமத்துச் சந்தை, கிராமிய நடனம், சுவரோவியம், மரபுத் தமிழன்-தமிழாள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

தங்கள் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திய மாணவ-மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களுடன் பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...