திருப்பூர் உடுமலை ராணுவ பயிற்சி பள்ளியில் கலை போட்டிகள் - வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு

உடுமலை அடுத்த அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான கலைப் போட்டியில் பல்வேறு மாநில மாணவ மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகர் பகுதியில் சைனிக் எனப்படும் ராணுவ பயிற்சி பள்ளி மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில், கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடப்பு கல்வியாண்டுக்கான அகில இந்திய அளவிலான மண்டலங்களுக்கு இடையேயான கலை போட்டிகள் நடைபெற்றது. சைனிக் பள்ளி சங்கம் இதனை முதல் முறையாக நடத்துகிறது.

அமராவதிநகர் சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல்.கே.ரகு முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் நடுவர்களாக கோவை இயற்கை அறிவியல் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர். சீனிவாசன், உடுமலைப்பேட்டை கே.வி பள்ளி முதல்வர் சக்ரதாராபிரஸ்டி, உடுமலைப்பேட்டை சீனிவாச பொதுப் பள்ளி முதல்வர் சத்தியபாமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சைனிக் பள்ளி கொருகொண்டா (ஆந்திரா), சைனிக் பள்ளி சந்திரபூர் (மகாராஷ்ட்ரா), சைனிக் பள்ளி மெயின்புரி (உத்திர பிரதேசம்) மற்றும் சைனிக் பள்ளி நாலந்தா (பிஹார்) ஆகிய அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றன.



இதில் குழு பாடல் போட்டி, குழு கருவி இசை, மைம் (ஊமை நாடகம்), குறு நாடகம் மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடை பெற்றன. சைனிக் பள்ளி சந்திராபூர் குழு பாடல் மற்றும் குழு இசைக் கருவிக்கான போட்டிகளில் வெற்றி பெற்றது.



சைனிக் பள்ளி கொருகொண்டா மைம் போட்டியில் வென்றது, குழு நடனப் போட்டியில் சைனிக் பள்ளி மெயின்புரியும், குறு நாடக போட்டியில் சைனிக் பள்ளி நாளந்தாவும் வெற்றி பெற்றன. சைனிக் பள்ளி சந்திராபூர் ஒட்டுமொத்த கோப்பைக்கான வாகையர் பட்டத்தை வென்றது.



இந்த நிகழ்ச்சியில் மூத்த ஆசிரியர் எஸ்.பால்ராஜ், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அனைத்து கேடட்களும் கலந்து கொண்டனர். அமராவதி நகர் சைனிக் பள்ளியின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தீபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...