பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் மனிதநேய வார விழா: கலை நிகழ்ச்சிகளில் அசத்திய மாணவ-மாணவிகள்

கோவை பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில், கலை நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகளின் மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளில் உள்ள மாணவ மாணவிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தவும் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா பாலக்காடு சாலையில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் நடைபெற்றது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாட்டு போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.



இந்தப் போட்டிகளில் ஆதிதிராவிடர் நல பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, மாணவ மாணவியர் தங்கும் விடுதிகளில் உள்ள மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...