கோவை வேளாண்மை பல்கலையில் உள்கட்டமைப்பு வசதிகள்‌ திறப்பு விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மலரியல்‌ மற்றும்‌ நில எழிலூட்டும்‌ துறையின்‌ உள்கட்டமைப்பு வசதிகள்‌ திறப்பு விழா நடைபெற்றது. இதில் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு உட்கட்டமைப்பு வசதிகளைத் திறந்து வைப்பு.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 'உயர்தர விதை நடவுப்‌ பொருள்‌ உற்பத்தி மற்றும்‌ தொழில் நுட்பங்கள்‌ மூலம்‌ தமிழ்நாட்டில்‌ மலர்கள்‌ உற்பத்தியைப்‌ பெருக்குதல்‌' என்கிற திட்டத்தின்‌ மூலம்‌ உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளைத் துணைவேந்தர்‌ கீதாலட்சுமி திறந்து வைத்தார்‌.



கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மலரியல்‌ மற்றும்‌ நில எழிலூட்டும்‌ துறையின்‌ உள்கட்டமைப்பு வசதிகள்‌ திறப்பு விழா நடைபெற்றது. 2020-2022 ஆம்‌ ஆண்டுக்கான தேசியவேளாணர்‌ வளர்ச்சித்‌ திட்டமான “உயர்தர விதை நடவுப்‌ பொருள்‌ உற்பத்தி மற்றும்‌ தொழில் நுட்பங்கள்‌ மூலம்‌ தமிழ்நாட்டில்‌ மலர்கள்‌ உற்பத்தியைப்‌ பெருக்குதல்‌” என்கிற திட்டத்தின்‌ மூலம்‌ உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை, துணைவேந்தர்‌‌ கீதாலட்சுமி திறந்து வைத்தார்‌.



புதிதாக நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளில்‌ 100 நபர்கள்‌ அமரும்‌ வகையில்‌ பயிற்சி அரங்கம்‌, காணொலி கருத்தரங்கு, முதுகலை ஆய்வுக்கூடம்‌, திருவள்ளுவர்‌ சிலை, சிலைக்கு அருகில்‌ உள்ள நுழைவாயில்‌ ஆகியவை அடங்கும்‌. மேற்கூறிய வசதிகள்‌ அனைத்தும்‌ தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்‌ நிதியுதவியுடன்‌ முடிக்கப்பட்டுள்ளது.‌ ராசி விதைகள்‌ நிறுவனத்தின்‌ நிதியுதவியுடன்‌ திருவள்ளுவர்‌ சிலை நிறுவப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளைத் தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, கோயம்புத்தூரின்‌ முதல்வர்‌ ஐரின்‌ வேதமணி தலைமையில் முனைவர்‌. ராஜாமணி பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, மலரியல் மற்றும்‌ நில எழிலூட்டும்‌ துறையின்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ முதுகலை மாணவர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து செய்திருந்தனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...