கோவை வேளாண்மை பல்கலையில் சிறப்புப் பயிலரங்கம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறுதானியங்களில்‌ தொழில்‌ முனைவோர்‌ வாய்ப்புகள்‌ குறித்த பயிலரங்கம்‌ நடைபெற்றது.


கோவை: சிறுதானிய பயிர்களைத் தரிசு நிலங்களில்‌ சாகுபடி செய்வதற்கு அரசு ஊக்கப்படுத்துவதாகத் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்ப மையம்‌ மற்றும்‌ இ-யுவா மையம்‌ சார்பில்‌ சிறுதானியங்களில்‌ தொழில்‌ முனைவோர்‌ வாய்ப்புகள்‌ என்ற தலைப்பில்‌ ஒருநாள்‌ போட்டி நடைபெற்றது.



முதல்‌ சுற்றுப் போட்டியில்‌ 22 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறுதானிய ஆண்டு 2023இன்‌ ஒரு பகுதியாக, புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும்‌ நோக்கத்துடன்‌, பைராக்‌-ன்‌ ஆதரவுடன்‌ இ-யுவா மையம்‌ இந்த பயிலரங்கை மேற்கொண்டுள்ளது.

புதுமையான யுக்திகள்‌, ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும்‌ தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சி ஆகியவற்றைக்‌ கொண்ட ஐந்து கருப்பொருள்‌ பகுதிகளில்‌ போட்டி நடைபெற்றது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ கீதாலட்சுமி, சிறுதானியங்களின்‌ முக்கியத்துவத்தைப்‌ பற்றியும்‌, தொழில்‌ முனைவோர்களுக்கான வாய்ப்புகள்‌ குறித்தும்‌, தமிழ்நாடு அரசு சிறுதானியங்களின்‌ மகசூலை அதிகரிப்பதற்காக இப்பயிர்களைத் தரிசு நிலங்களில்‌ சாகுபடி செய்வதற்கு ஊக்கப்படுத்துவது குறித்தும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தாவர உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ கோகிலாதேவி நன்றி தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...