கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 74வது குடியரசு தின விழா, மினி மாராத்தான், சிறப்பு பட்டிமன்றம் என வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழாவை ஒட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் பொறியியல் கல்லூரியில் 74வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. விஜயகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில், கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியைக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் துவக்கி வைத்தார்.

மேலும் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் குடியரசு தின சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமானது, அறிவின் பெருக்கம் அல்லது உறவின் நெருக்கம் என்ற தலைப்பில் முனைவர் சி.சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.



இவ்விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர்.



போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு கல்லூரியின் முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...