கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் கொடியேற்றினார்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் நடந்த 74வது குடியரசு தின விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ராச. வசந்தகுமார் கொடியேற்றினார்.

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் 74வது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ராச. வசந்தகுமார் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



பின்னர் அவர் பேசுகையில்,

'நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. நாட்டின் வளர்ச்சியே நமது வளர்ச்சி என்னும் தத்துவத்தை இளைஞர்கள் உள்ளத்தில் கொண்டு, அனைத்து நிலைகளிலும் நாட்டை உயர்த்த உழைக்க வேண்டும்.

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முதலான அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, இந்தியாவை உலக அரங்கில் முதன்மை பெறச் செய்ய வேண்டும்' என்றார்.

விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் முருகையா, துணைவேந்தர் முனைவர் வேங்கடாசலபதி, பதிவாளர் முனைவர் சு. இரவி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...