கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் இன்று பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது.


கோவை: கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழாவை, மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடினர்.



கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் பொங்கல் வைத்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் பரிமாறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர், மாணவியர்களுக்குக் கயிறு இழுத்தல், உரி அடித்தல் மற்றும் கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து விழாவினை கொண்டாடினர். மருத்துவ மாணவர்களோடு, பேராசிரியர்களும் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் பலத்தைக் காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது.





Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...