கணியூர் பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை அருகே கணியூர் பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் உறியடித்தல், பம்பரம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுடன் கொண்டாட்டம்.


கோவை: கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்விக் குழுமத்தின் வளாகத்தில் இன்று பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 2000 மாணவர்கள் மற்றும் 300ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து கடவுளை வணங்கினர்.

விழாவைச் சிறப்பிக்கும் விதமாகப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கும்மி மற்றும் உறியடித்தல், பம்பரம், துப்பாக்கி சுடுதல், கயிறு இழுத்தல் போன்றவை நடைபெற்றது. இதில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவில் பேசிய கல்விக்குழும முதன்மைச் செயலர் டாக்டர் அனுஷா ரவி, மாணவர்களின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நாம் என்றும் நமக்கு உணவளிக்கும் விவசாயியையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கையையும், கடவுளையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்த வளாகத்தைப் பார்க்கும் போது தன்னுடைய கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக அனைவருக்கும் அறுசுவையான பொங்கல் விருந்து வழங்கப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...