கோவை கற்பகம் உயர் கல்விக்கழகத்தில் முப்பெரும் பொங்கல் விழா!

கோவை கற்பகம் உயர் கல்விக்கழகத்தில் சொற்பொழிவு, பட்டிமன்றம், நாட்டுப்புற நடனம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாட்டம்.


கோவை: கோவை கற்பகம் உயர் கல்விக்கழகத்தில் பொங்கல் விழா, முப்பெரும் விழாவாகப் புதன் மற்றும் வியாழன் (11.01. 2023 மற்றும் 12.01.2023) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வாகத் திருவள்ளுவர் அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவு நேற்று காலை 11மணியளவில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாளராகக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சு.ஆனந்தவேல் 'வள்ளுவமே வழி' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அதன் தொடர்ச்சியாகப் பிற்பகல் 1.45 மணியளவில் 'இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி மாணவர்களுக்கு வரமே... சாபமே..' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மாணவர்களே பேச்சாளர்களாகக் கலந்து கொண்ட இந்தப் பட்டிமன்றத்தின் சிறப்பாக விளங்கியது.

இரண்டாம் நாளான இன்று பொங்கல் விழாப் போட்டிகள் நடைபெற்றன.



இந்நிகழ்வில் பொங்கல் வைத்தல், சிலம்பம், கோலமிடுதல், உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் நாட்டுப்புற நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் வென்றவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ளப் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...