கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் களைக்கட்டிய பொங்கல் விழா

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை சார்பிலும் பொங்கல் வைக்கப்பட்டது.



மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தனர். இவ்விழாவை ஒட்டி கல்லூரி மாணவர், மாணவியர்களுக்குக் கயிறு இழுத்தல், உறியடி மற்றும் கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் விஜயகுமார் பரிசுகளை வழங்கினார்.



காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த விழாவில் கலைநிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம் எனக் களைக்கட்டியது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...