கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ வேலைவாய்ப்பு முகாம்‌

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌, மாணவர்‌ நல மையத்தில்‌ இளநிலை இறுதியாண்டில்‌ பயிலும்‌ அனைத்துப்‌ பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெற்றது.



இந்த முகாமில்‌ தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ மாநிலம் முழுவதும்‌ உள்ள 14 உறுப்பு கல்லூரிகளிலிருந்து 1,196 மாணவர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்‌ நல மைய மரகதம் வரவேற்றார். பேராசிரியர்‌ செல்லமுத்து வேலைவாய்ப்பு முகாம்‌ குறித்த விளக்கமளித்தார்‌.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ கீதாலட்சுமி தலைமை தாங்கினார்.



அப்போது பேசிய அவர், "தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள வேளாண்மைக்‌ கல்லூரி மாணவர்கள்‌ அனைவரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இந்த வேலைவாய்ப்பு முகாம்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி தங்களது திறனை வெளிப்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்" என்றார்.



வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்து கொண்ட கருடா ஏரோஸ்பேஸ்‌ நிறுவனத்தின் தலைவர்‌ ஜேய்ஸ்‌ சொர்தியா, கருடா ஏரோஸ்பேஸின்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌, டிரோன்‌ செயல்பாடு எங்கெல்லாம்‌ பயன்படுத்தப்படுகிறது என்பதையும்‌, வேளாண்மைத்‌ துறையில்‌ டிரோன்களின்‌ பயன்பாடு எவ்வாறு உள்ளது என்பதையும்‌ சுட்டிக்காட்டி பேசினார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம்‌ மூலம்‌ திறன்‌ வாய்ந்த 600 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்தார்‌. இறுதியில் பேராசிரியர்‌ மோகன லாவண்யா நன்றி தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...