கோவை குமரகுரு வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ஸ்வாதகம் நிகழ்ச்சி

கோவை குமரகுரு வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ஸ்வாதகம் நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.


கோவை: கோவையில் குமரகுரு கல்வி குழுமத்தின் கீழ் வேளாண் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நேற்றைய தினம் (07.01.2023) முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் ஸ்வாதகம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவர் மன்ற ஆலோசகரும், மண்ணியல் துறை இணை பேராசிரியருமான முனைவர் சு.ஹேமலதா வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி தாளாளர் பிரகாஷ் மற்றும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.ஜே.பாண்டியன் வேளாண் பட்டப்படிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

குமரகுரு வேளாண் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் சிறப்புகள் குறித்து பேசிய நிர்வாக அலுவலர் சரவணன், அருட்செல்வர் மகாலிங்கம் ஐயா அவர்களின் உயரிய நோக்கங்கள், வேளாண்மை பற்றிய சிந்தனைகளை இந்த நிறுவனமானது சீறும் சிறப்புமாக வழங்கி வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாஸ்கர் பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கல்லூரி விடுதியின் விதிமுறைகள் மற்றும் வசதிகள் குறித்து இணை விடுதி காப்பாளர்கள் இந்துமதி மற்றும் முனைவர்.சோபன் சக்கரவர்த்தி ஆகியோர் விளக்கமளித்தனர். இறுதியாக, முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.உஷாராணி நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...